பதவி விலகிய இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர்: அணிக்கு பங்காற்றியது பெருமை என நெகிழ்ச்சி !
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் தோல்விக்கு பிறகு இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து Chris Silverwood விலகுவதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியாவிடம் 4-0 என்ற நிலையில் இங்கிலாந்து அணி படுமோசமாக தோல்வியடைந்தது. இதனால் இங்கிலாந்து அணி நிர்வாகத்தில் ஏற்பட்ட அழுத்தத்தை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் Chris Silverwood விலகியுள்ளார்.
இந்த அறிவிப்பு Chris Silverwoodயை பயிற்சியாளராக தேர்வு செய்த இங்கிலாந்து அணியின் நிர்வாக பொறுப்பாளர் Ashley Giles விலகிய அடுத்த நாள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து Silverwood தெரிவிக்கையில், இந்த இரண்டு ஆண்டு பயணம் மிகவும் அருமையாக இருந்ததாகவும், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்தது பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஜோ ரூட் மற்றும் ஈயின் மோர்கன் ஆகியோருடன் பணிப் புரிந்தது சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நிர்வாக பொறுப்பாளராக இருந்த Ashley Giles பதவிக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் Andrew Straussயை நியமித்துள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை பொறுப்பாளர் Tom Harrison தெரிவித்துள்ளார்.
Andrew Strauss வெஸ்ட் இண்டீஸ் எதிராக வரவிருக்கும் தொடருக்கு தற்காலிக பயிற்சியாளரை நியமிப்பார் எனவும் Tom Harrison தெரிவித்துள்ளார்.