342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி! அனைத்து அணிகளையும் ஓரங்கட்டி இமாலய சாதனை
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.
பெத்தேல், ரூட் சதம்
சௌதாம்டானில் நடந்த ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
Hold the pose! 😍
— England Cricket (@englandcricket) September 7, 2025
Beautiful striking from Jacob Bethell 😮💨 pic.twitter.com/FSwItzReu8
முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 414 ஓட்டங்கள் குவித்தது. ஜேக்கப் பெத்தேல் 82 பந்துகளில் 110 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 13 பவுண்டரிகள்) விளாசினார்.
ஜோ ரூட் (Joe Root) 96 பந்துகளில் 100 ஓட்டங்களும், ஜோஸ் பட்லர் (Jos Buttler) 32 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்களும் எடுத்தனர்.
An absolute run-machine ⚙@IGCom | 🏴 #ENGvSA 🇿🇦 pic.twitter.com/6A0eOnYwQz
— England Cricket (@englandcricket) September 7, 2025
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 20.5 ஓவரில் 72 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக போஷ் (Bosch) 20 ஓட்டங்கள் எடுத்தார்.
இங்கிலாந்து சாதனை
இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் 4 விக்கெட்டுகளும், அடில் ரஷீத் 3 விக்கெட்டுகளும், பிரைடோன் கார்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்தது.
இதற்கு முன் 2023யில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.
அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள்
- இங்கிலாந்து - 342 ஓட்டங்கள்
- இந்தியா - 317 ஓட்டங்கள்
- அவுஸ்திரேலியா - 309 ஓட்டங்கள்
- ஜிம்பாப்வே - 304 ஓட்டங்கள்
- இந்தியா - 302 ஓட்டங்கள்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |