யூரோ 2020 இறுதிப் போட்டி: டிக்கெட் கிடைக்குமா? அலைமோதும் இங்கிலாந்து ரசிகர்கள்
யூரோ 2020 இறுதிப் போட்டிக்கான டிக்கட்டுகள் சில நாட்களுக்கு முன்பாகவே விற்றுத் தீர்ந்த நிலையில், இன்னும் டிக்கட்டுகள் கிடைக்குமா என இங்கிலாந்து ரசிகர்கள் தேடிவருகின்றனர்.
லண்டன் வெம்ப்லி அரங்கத்தில் வரும் ஜுலே 11-ஆம் திகதி யூரோ 2020 இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது, இதில் இத்தாலிக்கு எதிராக இங்கிலாந்து அணி போட்டியிடவுள்ளது.
நேற்று டென்மார்க் அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன் மூலமாக, 55 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால் ஆட்டத்தை நேரில் கண்டுகளிக்க இங்கிலாந்து ரசிகர்கள் மிகுந்த ஆரவத்தில் இருக்கின்றனர்.
இறுதிப் போட்டிக்கான டிக்கட்கள் அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்பாகவே விற்றுத் தீர்ந்துவிட்டன. வகை 3 டிக்கெட்டுகளின் விலை £ 295, வகை 2 விலை £ 595 மற்றும் வகை 1 டிக்கட்டுகளின் விலை £ 945 என விற்கப்பட்டன.
இதனைத் தவிர்த்து, டிக்கெட் கிடைக்காத நிலையில், இறுதி போட்டிக்கான ப்ளாக் டிக்கட்டுகள் £ 6500 வரை விற்கப்பட்டுவருவதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், இதற்கு மேலும் டிக்கட்டுகள் கிடைக்குமா என ரசிகர்கள் அலைமோதி வருகின்றனர். Google-ல் 'euro 2020 tickets resale', 'england euro tickets', 'uefa england tickets', 'euro 2020 final tickets' என ரசிகர்கள் தேடி வருகின்றனர். 10 மடங்கு அதிக விலை கொடுத்து பிளாக் டிக்கட் வாங்கவும் தயாராக உள்ளனர்.
Wembley அரங்கத்தில் யூரோ 2020 இறுதிப் போட்டிக்கு 60,000 டிக்கட்டுகள் விற்கப்பட்டுள்ளன. அதாவது அரங்கத்தின் 75 சதவீத இருக்கைகள் நிரப்பபட்டுள்ளன.
Wembley அரங்கத்தின் மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 90,000 ஆகும். ஆனால், 25 சதவீத டிக்கட்டுகள் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, நெரிசலை தவிர்ப்பதற்காக விற்கப்படவில்லை.
இனியும், ஏதேனும் கூடுதல் டிக்கெட்டுகள் விரிக்கப்படும் எனில், அவை EUFA டிக்கெட் போர்ட்டலில் விற்கப்படும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022