வங்க தேசத்தை ஊதி தள்ளி இங்கிலாந்து அபார வெற்றி! தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்து அசத்தல்
டி20 உலகக் கோப்பையில் ‘சூப்பர் 12’ சுற்றில் வங்க தேசத்திற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றிப்பெற்றது.
இன்று அபுதாபி மைதானத்தில் தொடங்கிய இங்கிலாந்து-வங்க தேசம் இடையேயான ‘சூப்பர் 12’ போட்டியில் டாஸ் வென்ற வங்க தேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்த வங்க தேச அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.
லிட்டன் தாஸ் (9), முகமது நைம் (5), ஷாகிப் அல் ஹசன் (4), முஷ்பிகுர் ரஹீம் (29), மஹ்முதுல்லா (19), ஹொசைன் (5), நூருல் ஹசன் (16), மஹேதி ஹசன் (11), முஸ்தாபிசுர் ரஹ்மான் (0) ரன்களில் ஆட்டமிழந்தனர். நசும் அகமது இறுதிவரை ஆட்டமிழக்காமல் 19 ரன்கள் எடுத்தார்.
Bangladesh now lose their skipper ☝️
— T20 World Cup (@T20WorldCup) October 27, 2021
He charges down against Livingstone but skews his shot and has to depart for 19.#T20WorldCup | #ENGvBAN | https://t.co/lyuqx0NllZ pic.twitter.com/zYWumTBidA
இதைத்தொடர்ந்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 14.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலங்கை எட்டியது.
ஜேசன் ராய் (61), ஜோஸ் பட்லர் (18) ரன்களில் ஆட்டமிழந்தனர். டேவிட் மலான் ( 28), ஜானி பேர்ஸ்டோ ( 8) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வங்க தேச தரப்பில் ஷோரிஃபுல் இஸ்லாம், நாசூம் அகமது தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Bangladesh end up with a total of 124/9.
— T20 World Cup (@T20WorldCup) October 27, 2021
Against a fearsome English batting line-up, will it prove to be enough? #T20WorldCup | #ENGvBAN | https://t.co/lyuqx0NllZ pic.twitter.com/PxsL5eKZvP
வங்க தேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 12 சுற்றில் தொடர்ந்து இரண்டாவது பதிவு செய்துள்ள இங்கிலாந்து, குரூப் 1 பிரிவில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
சூப்பர் 12 சுற்றில் விளையாடி இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ள வங்க தேச அணி, குரூப் 1 பிரிவு புள்ளிப்பட்டியலில் புள்ளிகள் ஏதுமின்றி 5 இடத்தில் உள்ளது.