487 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து லயன்ஸ்: நொறுங்கிய மேற்கிந்திய தீவுகள் ஏ..இமாலய வெற்றி
England lions won by 276 runs vs west indies A: மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து லயன்ஸ் 276 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
வார்னர் பார்க் மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியில், 487 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து லயன்ஸ், 276 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் ஏ அணியை வீழ்த்தியது.
பென் மெக்கென்னி 145
மேற்கிந்திய தீவுகள் ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி வார்னர் பார்க்கில் நடந்தது.
முதலில் ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 487 ஓட்டங்கள் குவித்தது. பென் மெக்கென்னி 145 (65) ஓட்டங்கள் விளாசினார். ஜேம்ஸ் ரீவ் 107 (56) ஓட்டங்களும், அணித்தலைவர் டேன் லாரன்ஸ் 56 பந்துகளில் 76 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் ஏ அணி 30.5 ஓவர்களில் 211 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. கேஸி கார்ட்டி 75 (54) ஓட்டங்களும், கிர்க் மெக்கென்சி 67 (64) ஓட்டங்களும் விளாசினர்.
எடி ஜேக் 5 விக்கெட்டுகளும், மேசன் கிரேன் 3 விக்கெட்டுகளும், சாம் குக் ஒரு விக்கெட்டும் வீழ்த்த இங்கிலாந்து லயன்ஸ் 276 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
