8 புள்ளிகள் குறைப்பு..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவு
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் இங்கிலாந்து 8 புள்ளிகளை இழந்துள்ளது.
பிரிஸ்பேனில் நடந்த முதலாவது ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா வெற்றிப்பெற்றது.
முதல் ஆஷஸ் டெஸ்டில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுக்குள் இங்கிலாந்து அணி 5 ஓவர்கள் குறைவாக வீசியதால், இங்கிலாந்து அணி போட்டி ஊதியத்தில் இருந்து 100 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, குறைவாக வீசப்பட்ட ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு புள்ளி என்ற கணக்கில், 5 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை இங்கிலாந்து இழந்தது.
இந்நிலையில், முதல் ஆஷஸ் டெஸ்டில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுக்குள் இங்கிலாந்து அணி 8 ஓவர்கள் குறைவாக வீசியுள்ளதால், 8 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை இங்கிலாந்து இழப்பதாக ஐசிசி டிசம்பர் 17ம் திகதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு ஏற்கனவே 5 புள்ளிகள் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 3 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் நடைபெற்று வரும் 2021-2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 6 புள்ளிகளுடன் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி, 1 வெற்றி, 3 தோல்வி மற்றும் 1 டிரா சந்தித்துள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இவ்வாறு புள்ளிகள் குறைக்கப்படும் அணிஇறுதிப்போட்டிக்கு முன்னேறுவது என்பது சற்று கடினமானம் என்பது குறிப்பிடத்தக்கது.