இங்கிலாந்தின் விக்கெட்டை எடுக்க துவங்கிய இந்தியா! அடுத்தடுத்து விக்கெட்: வெளியான வீடியோ
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி Leeds-ல் இருக்கும் Yorkshire Cricket மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி, இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல், 78 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அதன் பின் ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 120 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
துவக்க வீரர்களான Rory Joseph Burns 61 ஓட்டங்களுடனும், Haseeb Hameed 60 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
What a delivery it was by Shami, top of off - a peach.#ENGvIND pic.twitter.com/m7AVwS4ybj
— Neelabh (@CricNeelabh) August 26, 2021
முதல் நாள் ஆட்டத்தில் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி திணறியதால், இங்கிலாந்து அணி இதே வேகத்தில் சென்றால், 500 ஓட்டங்களுக்கு மேல் குவித்து தான் டிக்ளேர் செய்யும் என்று கணிக்கப்பட்டது.
ஆனால், அந்த கணிப்பை எல்லாம் பொய்யாக்கும் வகையில், இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதன் படி இன்று Rory Joseph Burns(61) ஓட்டம் கூட அடிக்க விடாமல், மொகமது ஷமி தன்னுடைய துல்லியமான பந்து வீச்சின் மூலம் அவுட்டாக்கினார்.
First wicket for Ravindra Jadeja in the series.
— CricketNews.com (@cricketnews_com) August 26, 2021
First wicket for an Indian spinner in the series. #ENGvINDpic.twitter.com/V4oZgcW867
அதே போன்று Haseeb Hameed-ஐ 68 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா போல்டாக்கி வெளியேற்றினார்.
சற்று முன் வரை இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.