54 ரன்னுக்கு 5 விக்கெட்! இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த பந்துவீச்சாளர்கள்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்க்ஸை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 282 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக பிராத்வெயிட் 61 ஓட்டங்களும், ஹோல்டர் 49 ஓட்டங்களும் விளாசினர். அட்கின்சன் 4 விக்கெட்டுகளும், வோக்ஸ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
The 1st innings ends at 2️⃣8️⃣2️⃣.?
— Windies Cricket (@windiescricket) July 26, 2024
Time to back it up with the ball.??#ENGvWI | #MenInMaroon | #Apex pic.twitter.com/nSLOTMftAy
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது. பென் டக்கெட் 3 ஓட்டங்களில் ஜோசப் ஓவரில் போல்டு ஆனார்.
பின்னர் வந்த மார்க்வுட் ரன் எடுக்காமலும், ஓலி போப் 10 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ஹாரி புரூக் 2 ஓட்டங்களில் சீல்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார்.
இதனால் இங்கிலாந்து அணி 54 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் இருவரும் ஆடி வருகின்றனர்.
Fast and in a hurry!??♂️?
— Windies Cricket (@windiescricket) July 27, 2024
The 6️⃣th youngest WI bowler to 5️⃣0️⃣ Test wickets.#ENGvWI | #MenInMaroon pic.twitter.com/xOYwXwqfot
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |