2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் முக்கிய மாற்றம்! நட்சத்திர வீரருக்கு ஓய்வு
2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடந்த முதலாவது அஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அபார வெற்றிப்பெற்றது.
அதுமட்டுமின்றி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றது.
இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஆஷஸ் டெஸட் போட்டிய அடிலெய்டு ஓவல் மைதானத்தில் டிசம்பர் 16ம் திகதி தொடங்கவிருக்கிறது.
இந்நிலையில், 2வது அஷ்ஸ் டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:
- ஜோ ரூட் (கேப்டன்)
- ஜிம்மி ஆண்டர்சன்
- ஸ்டூவர்ட் பிராட்
- ரோரி பர்ன்ஸ்
- ஜோஸ் பட்லர்
- ஹசீப் ஹமீத்
- ஜாக் லீச்
- டேவிட் மலான்
- ஒல்லி போப்
- ஒல்லி ராபின்சன்
- பென் ஸ்டோக்ஸ்
- கிறிஸ் வோக்ஸ்
முதல் டெஸ்டில் விளையாடிய மார்க் வுட்-க்கு 2வது டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக 12 கொண்ட இங்கிலாந்து அணியில் ஜிம்மி ஆண்டர்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
டாஸின் போது பிளேயிங் லெவன் உறுதி செய்யப்படும் என இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.