முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவின் காபா மைதானத்தில் நடைபெற்ற உள்ள முதல் ஆஷஸ் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது அஷஸ் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையே கடந்த 1884ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை என ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதுவரை 71 ஆஷஸ் தொடர்கள் நடந்துள்ளன. அதில் ஆஸ்திரேலியா 33 தொடர்களை, இங்கிலாந்து 32 தொடர்களை வென்றுள்ளன, 6 தொடர்கள் டிராவில் முடிந்துள்ளன.
இந்நிலையில், முதல் அஷ்ஸ் டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:
- ஜோ ரூட் (கேப்டன்)
- ஸ்டூவர்ட் பிராட்,
- ரோரி பர்ன்ஸ்
- ஜோஸ் பட்லர்
- ஹசீப் ஹமீத்
- ஜாக் லீச்
- டேவிட் மலான்
- ஒல்லி போப்
- ஒல்லி ராபின்சன்
- பென் ஸ்டோக்ஸ்
- கிறிஸ் வோக்ஸ்
- மார்க் வுட்