2வது ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த அவுஸ்திரேலிய! காப்பாற்றுவாரா ரூட்
அடிலெய்டில் நடைபெற்று வரும் 2வது ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்துக்கு 468 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது அவுஸ்திரேலிய அணி.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வீழ்த்திய நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் அடிலெய்டில் இரவு-பகல் போட்டியாக டிசம்பர் 16ம் திகதி தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்திருந்து போது டிக்ளர் செய்தது.
முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக அவுஸ்திரேலிய வீரர் Marnus Labuschagne 103 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் பந்து வீச்சில் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 236 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மலான் 80 ரன்கள் எடுத்தார், அவுஸ்திரேலிய தரப்பில் பந்து வீச்சில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இன்று நான்காவது நாள் போட்டி தொடங்கிய நிலையில் தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் விளையாடி வந்த அவுஸ்திரலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்திருந்து போது டிக்ளர் செய்து, இங்கிலாந்து வெற்றிக்கு 468 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
2வது இன்னிங்ஸில் அதிகபட்சமாக அவுஸ்திரேலிய வீரர் Marnus Labuschagne 51 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் பந்து வீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ரூட், மலான் தலா இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தனர்.
468 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 8வது ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 20 ரன்கள் எடுத்துள்ளது.
Hameed falls early as England begin a mammoth task to save the Test in Adelaide #Ashes
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 19, 2021
4வது ஆட்டத்தில் இன்னும் 36 ஓவர்கள் மீதமுள்ளது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் நிதானமாக விளையாடி அணியை காப்பாற்றுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.