நியூசிலாந்தை நொறுக்கி சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ் படை! புதிய வரலாறு எழுதிய இங்கிலாந்து
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி வரலாறு படைத்தது.
இங்கிலாந்து 499
கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 348 ஓட்டங்களும், இங்கிலாந்து 499 ஓட்டங்களும் குவித்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 254 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 104 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வரலாற்று சாதனை
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து 12.4 ஓவரிலேயே 104 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் 100 ஓட்டங்களுக்கு மேல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விரைவாக எட்டிய அணி எனும் வரலாற்று சாதனையை இங்கிலாந்து படைத்தது.
இந்த டெஸ்டில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றிய பிரைடன் கார்ஸ் (Brydon Carse) ஆட்டநாயகன் விருது பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |