87 வருட சாதனையை முறியடித்த ஆண்டர்சன்! திணறிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள்
இங்கிலாந்து அணியின் சிறந்த பந்து வீச்சாளாரான ஜேம்ஸ் ஆண்டர்சன் 87 வருடச் சாதனையை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முறியடித்துள்ளார்.
டெஸ்ட் தொடர்
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. பே ஓவலில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பாக பேட்டிங் செய்து நியூசிலாந்துக்கு எதிராக 200+ ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.
87 வருட சாதனை முறியடிப்பு
இந்த போட்டியில் வெற்றிபெற ஆண்டர்சனின் சிறப்பான பந்துவீச்சு தான் காரணம். 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் நியூசிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டரை திணற வைத்தார்.
@ap
இப்போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆண்டர்சன் சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் 40 வயதில் டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தை பிடித்த நபர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார்.
@espncricinfo
இதற்கு முன்னர் 1936ல் அஸ்திரேலிய பவுலர் கிளாரி கிரிம்மெட் தான் வயதான பவுலர் முதலிடத்தைப் பிடித்த சாதனையைச் செய்தார். அதற்கு பின்பு 87 வருடங்கள் கழித்து ஆண்டர்சன் 866 புள்ளிகளைப் பெற்று சாதனையை முறியடித்துள்ளார்.