பெரிய காரால் பிரித்தானிய பெண்ணுக்கு ஏற்பட்ட நஷ்டம்! எவ்வளவு தெரியுமா?
இங்கிலாந்தில் பெண் ஒருவர் இலவச கார் நிறுத்தும் இடத்தில் தனது பெரிய காரை நிறுத்தியதால் சுமார் £100 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் பார்க்கிங் என்பது மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகின்றது. பொது இடங்களில் கார் மற்றும் பைக்கை நிறுத்துவதற்கு மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பெண் ஒருவர் பார்க்கிங்கில் தனது காரை நிறுத்தியதால் அவருக்கு பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் Hhamshire Newarkகில் உள்ள Beacon Hill Retail Park பகுதியில் வசித்து வருபவர் Tracey Carlisle(57).
இவரது கணவர் Graham(61). இருவரும் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி தங்களது 4X4 Nissan Navara காரை இலவச பார்க்கிங்கில் நிறுத்தி பக்கத்தில் ஷாப்பிங் சென்றுள்ளனர். அப்போது திரும்பி வந்து பார்க்கும் போது அவர்களுக்கு £100 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய Tracey, ஒரு குறிப்பிட்ட வெள்ளைக்கோட்டில் காரை நிறுத்தவில்லை என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அது கவனக்குறைவாக செய்யப்படவில்லை. நாங்கள் 5.3 மீட்டர் நீளமும் கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் அகலம் கொண்ட Nissan Navara காரை வைத்துள்ளோம்.
அதனால் குறிப்பிட்ட அளவில் எங்களால் நிறுத்த முடியவில்லை. எனவே கதவை முழுமையாக திறக்க கூடுதல் இடம் தேவைப்பட்டது. இதனால் தான் இரண்டு பார்க்கிங் ஏரியாவை ஒன்றாக இணைத்து பயன்படுத்தினோம்.
நான் அபராதத்தை செலுத்துவேன். ஏனென்றால் அவர்கள் எங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அது எங்கள் கடன் நிலை அனைத்தையும் பாதிக்கலாம் என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.