கத்தார் உலகக் கோப்பை: இங்கிலாந்து கனவை உதைத்து தள்ளிய பிரான்ஸ்
ஆட்டம் முடிய சில நிமிடங்கள் எஞ்சிய நிலையில் இங்கிலாந்தின் ஹரி கேன் பெனால்ட்டி வாய்ப்பை தவறவிட்டதால் பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி தோல்வி
கத்தார் உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி மொராக்கோவிடம் வெற்றிவாய்ப்பை இழந்து வெளியேறியுள்ள நிலையில், தற்போது இங்கிலாந்து அணியும் பிரான்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது.
@getty
பரபரப்பான ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ் அணியின் Aurelien Tchouameni மின்னல் வேகத்தில் கோல் ஒன்றை பதிவு செய்ய, பெனால்ட்டி ஷூட் பகுதியில் இருந்து கோல் ஒன்றை அடித்து இங்கிலாந்தின் ஹரி கேன் சம நிலைக்கு அணியை கொண்டுவந்தார்.
ஆனால் அந்த மகிழ்ச்சியை பிரான்ஸ் அணியின் Olivier Giroud இன்னொரு கோல் கொண்டு தவிடுபொடியாக்கினார். ஆட்டம் முடிய 10 நிமிடங்கள் எஞ்சியுள்ள நிலையில், ஹரி கேன் பெனால்ட்டி வாய்ப்பை தவற விட,
@getty
அதன் பின்னர் Raheem Sterling, Marcus Rashford, Mason Mount, Jack Grealish ஆகிய நட்சத்திரங்கள் இயன்ற அளவு முயன்றும் பலனில்லாமல் போனது.
இதனையடுத்து, 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றியை பதிவு செய்ததுடன், புதன்கிழமை மொராக்கோ அணியுடன் மோத உள்ளது. பிரான்ஸ் அணி தொடர்ந்து இது இரண்டாவது முறையாக கால்பந்து உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
@getty