மைதானத்தை தாண்டி பக்கத்துக்கு மைதானத்துக்கு சென்ற பந்து! ஒரு இமாலய சிக்சரால் ரசிகர்களை சிலிர்க்க வைத்த பிரபல வீரர்... வைரல் வீடியோ
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் இங்கிலாந்து வீரர் லியம் லிவிங்ஸோடனின் இமாலய சிக்ஸர் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று முன் தினம் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
முன்னதாக இங்கிலாந்து பேட்டிங் செய்த போது லிவிங்ஸ்டோன் மற்றும் மொய்ன் அலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர்.
Biggest six ever?! ? @LeedsRhinos, can we have our ball back? ?
— England Cricket (@englandcricket) July 18, 2021
Scorecard/clips: https://t.co/QjGshV4LMM
??????? #ENGvPAK ?? pic.twitter.com/bGnjL8DxCx
லிவிங்ஸ்டன் 23 பந்துகளில் 3 சிக்ஸருடன் 38 ரன்களும் எடுத்து அசத்தினர். இதில் லிவிங்ஸ்டன் அடித்த ஒரு சிக்ஸர் மைதானத்தை தாண்டி வெளியில் சென்று, ரக்பி மைதானத்தில் சென்று விழுந்தது.
லிவிங்ஸ்டன் அடித்த இந்த சிக்ஸர் 122 மீட்டர் வரை சென்றுள்ளதாக கூறப்படுவதால், இதுவே கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட மிகப்பெரிய சிக்ஸர் என்ற அளவிற்கு பேசப்பட்டு வருகிறது.
அதே போல் லிவிங்ஸ்டன் சிக்ஸர் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.