உலகக்கோப்பை கனவு பொய்த்தது., ஆனால் கத்தாரில் இருந்து வெறுங்கையுடன் திரும்பாத இங்கிலாந்து வீரர்கள்!
உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பிறகு இங்கிலாந்து வீரர்கள் கத்தாரில் உள்ள பயிற்சி முகாமில் இருந்து ஒரு ஆதரவற்ற பூனையை தத்தெடுத்தனர்.
இங்கிலாந்து வீரர்கள் வாக்கர் மற்றும் ஸ்டோன்ஸால் தத்தெடுக்கப்பட்ட கத்தார் பூனை பிரித்தானியாவிற்கு கொண்டு செல்லப்படுகிது.
கடந்த சனிக்கிழமையன்று கால் இறுதியில் பிரான்ஸ் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது.
இதையடுத்து, உலகக் கோப்பையை வெல்லும் இங்கிலாந்தின் நம்பிக்கை பொய்த்திருக்கலாம், ஆனால் மான்செஸ்டர் சிட்டி இரட்டையர்கள் கைல் வாக்கர் மற்றும் ஜான் ஸ்டோன்ஸ், கத்தாரில் இருந்து முழுவதுமாக வெறுங்கையுடன் வீடு திரும்ப விரும்பவில்லை.
எனவே அவர்களின் பயிற்சி தளத்தில் அணியுடன் மிகவும் பாசமாக பழகிய ஒரு ஆதரவற்ற பூனையை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்கள்.
ஜான் ஸ்டோன்ஸால் 'டேவ்' என்று பெயரிடப்பட்ட அந்தப் பூனை, அவர்களுடன் மீண்டும் ஒன்றிணைவதற்கு முன் நான்கு மாதங்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
கத்தாரில், அல் வக்ராவில் உள்ள அடிப்படை முகாமில் பயிற்சியின் போது வீரர்கள் முதலில் பூனையைக் கண்டனர். அவர்கள் பூனைக்கு டேவ் என்று பெயரிட்டு, கத்தாரில் நான்கு வாரங்கள் தங்கியிருந்தபோது ஒவ்வொரு இரவும் அதற்கு உணவு கொடுத்தனர்.
குரோஷியாவுக்கு எதிரான பிரேசிலின் காலிறுதி மோதலுக்கு முன்னதாக பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியரும் அணி மேலாளரும் ஊடகவியலாளர் சந்திப்பின் நடுவில் இருந்தபோது ஒரு பூனை எங்கிருந்தோ அவர்களின் மேஜை மீது குதித்து அமர்ந்தது. அப்போது பிரேசிலின் மேலாளர் அதை முரட்டுத்தனமாக தூக்கி எறிந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இப்போது மீண்டும் ஒரு பூனை செய்திகளில் இடம்பெற்றுள்ளது.
Some people said Brazil were knocked out of the World Cup by Croatia after a Brazilian media officer tossed a stray cat during a FIFA press conference?
— The Brazilian Report (@BrazilianReport) December 9, 2022
'Cat curse'? pic.twitter.com/2XkxVp6e2M
Footballing legends John Stones and Kyle Walker have adopted a stray cat and named him Dave @ManCity pic.twitter.com/Rb8lImim4d
— Daily Express (@Daily_Express) December 11, 2022