டோனியை கண்முன் கொண்டு வந்த இங்கிலாந்து வீரர்! ரோகித்தை மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த வீடியோ
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தன்னுடைய மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் ரோகித்சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய இங்கிலாந்து விக்கெட் கீப்பரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் தீவிரமாக பரவி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான இன்று இந்திய அணி சற்று முன் வரை இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ஓட்டங்களும், இங்கிலாந்து அணி 134 ஓட்டங்களும் எடுத்திருந்த நிலையில், இந்திய அணி 364 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது.
Ben Foakes? pic.twitter.com/8rmjVaVkad
— Ajith (@introvert_49) February 15, 2021
இன்றைய நாள் ஆட்டத்தின் துவக்க வீரரான ரோகித்சர்மாவை இங்கிலாந்து வீக்கெட் கீப்பர் பென் போக்ஸ் அற்புதமான ஸ்டம்பிங் மூலம் வெளியேற்றினார். அவர் டோனியைப் போன்றே ஸ்டம்பிங் செய்தவுடன் இது அவுட் என்ற செய்கை செய்தார்.
இந்த நூலிழை ஸ்டம்பிங்கை இங்கிலாந்து ரசிகர்கள், பிரிட்டிஸ் டோனி என்று பென் போக்ஸை குறிப்பிட்டு வருகின்றனர்.