யூரோ கிண்ணம்... இக்கட்டான நிலையில் இருந்து தப்பிய 5 இங்கிலாந்து வீரர்கள்
யூரோ கிண்ணம் 2024ல் அரையிறுதிக்கு நுழைந்துள்ள இங்கிலாந்து அணியில், 5 வீரர்கள் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தப்பியுள்ளனர்.
ஜூட் பெல்லிங்ஹாம் உட்பட 5 வீரர்கள்
இங்கிலாந்து அணியில் நம்பிக்கை நட்சத்திரமான ஜூட் பெல்லிங்ஹாம் உட்பட 5 வீரர்கள் அரையிறுதியில் களமிறங்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும். ஆனால் தற்போது அந்த சிக்கல் இல்லை என்றே உறுதியாகியுள்ளது.
யூரோ கிண்ணம் தொடரில் காலிறுதிக்கு முன்னர் இரண்டு முறை மஞ்சள் அட்டை பெற்றிருக்கும் வீரருக்கு அடுத்த ஆட்டத்தில் களமிறங்க முடியாது. காலிறுதிக்கு முன்னர் ஒரு வீரர் 4 மஞ்சள் அட்டை எச்சரிக்கை பெற்றிருந்தால், இன்னொரு போட்டியிலும் அவர் தடை செய்யப்படுவார்.
அதாவது இரண்டு மஞ்சள் அட்டை எச்சரிக்கையை காலிறுதிக்கு முன்னர் பெற்றிருந்தால், அந்த வீரர் அரையிறுதியில் களமிறங்க முடியாமல் போகும். மேலும், மஞ்சள் அட்டை எச்சரிக்கை காரணமாக எந்த வீரரும் இறுதி ஆட்டத்தில் களமிறங்குவது தடுக்கப்படுவதில்லை.
மஞ்சள் அட்டை எச்சரிக்கை
இந்த நிலையில் ஏற்கனவே தலா ஒரு மஞ்சள் அட்டை எச்சரிக்கை பெற்றிருந்த இங்கிலாந்து அணியின் Kieran Tripper, Kobbie Mainoo, Conor Gallagher, Phil Foden மற்றும் ஜூட் பெல்லிங்ஹாம் உட்பட 5 வீரர்கள் சுவிட்சர்லாந்து அணியுடனான காலிறுதி ஆட்டத்தில் மஞ்சள் அட்டை எச்சரிக்கை பெறவில்லை என்பதால், இவர்கள் அரையிறுதி ஆட்டத்தில் களமிறங்குவதில் சிக்கல் இல்லை என்றே உறுதியாகியுள்ளது.
இருப்பினும், அரையிறுதியில் சிவப்பு அட்டை எச்சரிக்கை வாங்கினால், இறுதி ஆட்டத்தில் களமிறங்க முடியாமல் போவது உறுதி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |