ஜாம்பவான் தில்ஷன் ஆட்டத்தை பார்த்து திகைத்த இங்கிலாந்து வீரர்கள்! அபார வெற்றி பெற்ற இலங்கை அணி தொடர்ந்து முதலிடம்
இங்கிலாந்து ஜாம்பவான்கள் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை ஜாம்பவான்கள் அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் விளையாடும் சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி இலங்கை அணியினர் பந்துவீச்சில் திணறியது.
இங்கிலாந்து அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளையும் மூன்று ரன்களுக்குள் வீழ்த்தினார் திலகரத்னே தில்ஷன்.
?Match Day:
— Road Safety World Series (@RSWorldSeries) March 14, 2021
England Legends Vs Sri Lanka Legends #ENGLvsSLL#UnacademyRoadSafetyWorldSeries pic.twitter.com/PYEb6BdtWN
தொடர்ந்தும் இங்கிலாந்து அணி வீரர்கள் இலங்கை அணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 78 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
பந்துவீச்சில் தில்ஷன் 4 விக்கெட்களையும், ரங்கன ஹெரத் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
79 என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியானது 7.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை கடந்தது.
#ENGLvsSLL
— Road Safety World Series (@RSWorldSeries) March 14, 2021
After 6 overs #SriLankaLegends are 65 for 2.
The #EnglandLegends have no answers tonight.
Watch LIVE only on @Colors_Cineplex, #RishteyCineplex and for free on @justvoot. #UnacademyRoadSafetyWorldSeries pic.twitter.com/okSmBSrpVy
அணித் தலைவர் தில்ஷன் 26 பந்துகளில் ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகள் அடங்கலாக 61 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
இந்த வெற்றியுடன் 20 புள்ளிகளை பெற்று இலங்கை ஜாம்பவான்கள் அணி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
#ENGLvsSLL
— Road Safety World Series (@RSWorldSeries) March 14, 2021
An absolute masterclass by Tillakaratne Dilshan and the #SriLankaLegends tonight. Big win! Kudos to team #EnglandLegends for the gracious effort.
Watch LIVE only on @Colors_Cineplex, #RishteyCineplex and for free on @justvoot. #UnacademyRoadSafetyWorldSeries pic.twitter.com/Z9HDrMT9hZ