வெற்றிக்காக இப்படியா? பால் டெம்பரிங் செய்த இங்கிலாந்து வீரர்கள்: கையும் களவுமாக வெளியான புகைப்படம்
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பால் டெம்பரிங் நடந்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நான்காம் நாளான இன்று சற்று முன் வரை இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 105 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இந்நிலையில், இப்போட்டியின் போது இங்கிலாந்து வீரர்கள் பால் டெம்ப்பரிங்கில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பந்தை கீழே போட்டு, அதன் மீது தங்கள் ஷுவை அழுத்தி அங்கும், இங்கும் இழுப்பது போன்று இருந்துள்ளனர்.
Yeh kya ho raha hai.
— Virender Sehwag (@virendersehwag) August 15, 2021
Is it ball tampering by Eng ya covid preventive measures ? pic.twitter.com/RcL4I2VJsC
இது நேரலையின் போது தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டதால், இதைக் கண்ட ரசிகர்கள் இது பால் டெம்பரிங் தான், புதிதாக இப்படி செய்கின்றனர் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் போன்றோர் இது தொடர்பான புகைப்படத்தை பதிவிட்டு எதற்காக இப்படி செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.