பிரித்தானிய ரயில் பயணிகள் இழக்கவிருக்கும் ஒரு சேவை: கூறப்படும் காரணம்
பிரித்தானியாவில் வைஃபை சேவையை நிறுத்துமாறு ரயில் நிறுவனங்களுக்கு அரசாங்கம் கூறியதையடுத்து, ரயில் பயணிகள் அந்த சேவையை இழக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைஃபை சேவையை பயன்படுத்த
ஆனால் தொழில் ரீதியான தேவை என்பதை உறுதி செய்தால் மட்டுமே இனி வைஃபை சேவையை பயன்படுத்த முடியும் எனவும் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையானது செலவுகளைக் குறைக்கும் வகையில் போக்குவரத்துத் துறையால் முன்வைக்கப்பட்டுள்ளது.
@PA
பெரும்பாலான பிரித்தானிய ரயில் சேவைகளில் இலவச வைஃபை சேவை அனுமதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் போக்குவரத்து துறை இங்கிலாந்தில் உள்ள அதன் ஒப்பந்த ஆபரேட்டர்களிடம் அவர்கள் அதை நிதி ரீதியாக நியாயப்படுத்த முடியாவிட்டால் வைஃபை சேவையை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மேலும், குறுகிய தூர பயணிகளுக்கு வைஃபை சேவையின் தேவை இருக்காது எனவும் போக்குவரத்து துறை குறிப்பிட்டுள்ளது. ஆனால், போக்குவரத்து துறையின் இந்த வைஃபை ரத்து விவகாரம் பயணிகள் குழுக்கள் மற்றும் தொழில் துறையை சார்ந்தவர்களால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பயணிகளின் வருகை சரிவடைவது உறுதி
பயணிகளை ஈர்க்க இதுபோன்ற சேவைகள் கண்டிப்பாக தொடர வேண்டும் எனவும், கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய உச்ச பயணிகள் பயன்பாட்டு நிலையை எட்டுவதில் கணிசமான சரிவு காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
@reuters
இதனிடையே, ரயில் சேவையின் தரத்தை குறைக்கும் நடவடிக்கை இது எனவும், வைஃபை சேவையை ரத்து செய்வதால் பயணிகளின் வருகை சரிவடைவது உறுதி எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.