இங்கிலாந்துக்கு அணிக்கு விழுந்த பெரும் அடி! 2-வது டெஸ்ட்டில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்
இங்கிலாந்து அணியில் முக்கிய வீரர் ஒருவர் காயம் காரணம் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், இது இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களான ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் காயம் காரணமாக நாளை நடைபெறும் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
இதில், ஸ்டூவர்ட் பிராட் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் போது 5 ஓவர்கள் மட்டுமே வீசினார்.
ஏனெனில் அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது. தற்போது வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டிய நிலைமைக்கு ஸ்டூவர்ட் பிராட் தள்ளப்பட்டு உள்ளார்.
இதே போன்று ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும் ஏதோ காயம் ஏற்பட்டிருப்பதாகவும், தகவல்கள் கூறுகின்றனர்.
இது இங்கிலாந்து அணிக்கு பெரிய அடியாக பார்க்கப்படுவதால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று நம்பப்படுகிறது.