இஷான் கிஷன் அதிரடியைப் பார்த்து புகழ்ந்து தள்ளிய இங்கிலாந்து வீரர் ஜோசன் ராய்! என்ன சொல்லியிருக்கார் பாருங்க
இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான ஜோசன் ராய், இந்திய அணியின் இளம் வீரரான இஷான் கிஷானை பாராட்டி பேசியுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே மூன்று டி20 போட்டிகள் நடைபெற்று முடிந்து, இங்கிலாந்து அணி 2-1 என்று முன்னிலையில் உள்ளது.
இந்த தொடரில், இந்திய அணியில் இளம் வீரரான இஷான்கிஷானுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இரண்டாவது டி20 போட்டியில் களமிறங்கிய இஷான்கிஷான், அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.
அறிமுக போட்டியிலே வெளுத்து வாங்கினார். ஆனால் மூன்றாவது டி20 போட்டியில் வெறும் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் துவக்க வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான் ஜோசன் ராய், இஷான் கிஷன் தனது அறிமுக போட்டியிலயே சிறப்பாக விளையாடி இருக்கிறார்.
தற்போது இவர் நட்சத்திர வீரராக இருக்கிறார். இவர் அடித்து அதிரடியாக விளையாடியதில் எந்தொரு வியப்புமில்லை. இவர் தனது திறமையை வெளிக்கொண்டு இருக்கிறார் என்று பார்ட்டினார்.