டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் நட்சத்திர கிரிக்கெட் வீரர்! கசிந்த தகவல்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்து நட்சத்திர வீரர் மொயின் அலி ஓய்வு பெறவுள்ளதாக பிரிட்டிஷ் ஊடகம் தெரிவித்துள்ளது.
அதாவது, இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயின் அலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
ஓய்வு முடிவு குறித்து மொயின் அலி ஏற்கனவே இங்கிலாந்து டெஸ்ட அணி கேப்டன் ஜோ ரூட் மற்றும் தலைமை பயிற்சியாளர் Chris Silverwood-யிடம் தகவல் தெரிவித்துவிட்டார் என பிரட்டிஷ் ஊடகம் தெரிவித்துள்ளது.
34 வயதான மொயின் அலி இதுவரை இங்கிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மொயின் அலி, 28.29 என்ற சராசரியுடன் மொத்தம் 2,914 ரன்கள் அடித்துள்ளார். பந்துவீச்சில் மொத்தம் 195 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
2019 ஆஷஸ் தொடரிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வரும் மொயின், கடைசியாக இங்கிலாந்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.