165 ரன் விளாசிய வீரர்! அவுஸ்திரேலியாவுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 351 ஓட்டங்கள் குவித்தது.
ஜோ ரூட் 68
லாகூரில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடியது.
தொடக்க வீரர் பென் டக்கெட் (Ben Duckett) அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார்.
பவுண்டரிகளை அடுத்தடுத்து விரட்டிய அவர் சதம் விளாசினார். மறுமுனையில் ஜோ ரூட் 68 ஓட்டங்களிலும், பட்லர் 23 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
டக்கெட் 165
எனினும் வேகத்தை நிறுத்தாத டக்கெட் 143 பந்துகளில் 165 ஓட்டங்கள் குவித்தார். இதில் 3 சிக்ஸர், 17 பவுண்டரிகள் அடங்கும்.
கடைசி நேரத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் 10 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 21 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 351 ஓட்டங்கள் குவித்தது. ட்வர்ஷுய்ஸ் 3 விக்கெட்டுகளும், ஜம்பா மற்றும் லபுஷேன் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |