அனல் பறக்கும் அஷஸ்! முதல் பந்திலேயே கதிகலங்க வைத்த ஸ்டார்க்.. சொற்ப ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து
அஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது அஷஸ் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
முதல் பந்திலேயே ரோரி பர்ன்ஸை போல்டு எடுத்து ஸ்டார்க் இங்கிலாந்து அணியை கதிகலங்க வைத்தார்.
தொடர்ந்து மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 147 ரன்களுக்கு சுருண்டது.
ரோரி பர்ன்ஸ் (0), ஹசீப் ஹமீத் (25), டேவிட் மலான் (6), ஜோ ரூட் (0), பென் ஸ்டோக்ஸ் (5), ஒல்லி போப் (35), ஜோஸ் பட்லர் (39), கிறிஸ் வோக்ஸ் (21), ஒல்லி ராபின்சன் (0), மார்க் வுட் (8) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
Shivers down the spine! A ball we’ll remember forever! Unbelievable! #Ashes pic.twitter.com/Y5sgcpsyR2
— Chloe-Amanda Bailey (@ChloeAmandaB) December 8, 2021
ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஸ்டார்க், ஹேசில்வுட் தலா இரண்டு விக்கெட்டுகளையும், கிரீன் 1 விக்கெட் எடுத்தார்.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் களமிறங்க தயாரான நிலையில் மழை காரணமாக போட்டி தடைப்பட்டுள்ளது.