17 வருடங்களுக்கு பிறகு நடக்கும் டெஸ்ட் போட்டி! இங்கிலாந்து அணிக்கு வந்த சோதனை
ராவல்பிண்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் டிசம்பர்-1 (வியாழக்கிழமை) தொடங்கவுள்ளது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் இங்கிலாந்து விளையாடும் முதல் டெஸ்ட் இதுவென்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
14 உறுப்பினர்களுக்கு வைரஸ் பாதிப்பு
ஆனால், இப்போது முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, "கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உட்பட பல வீரர்கள் மற்றும் ஊழியர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், ஓய்வெடுக்க ஹோட்டலில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
AFP
தகவல்களின்படி, இங்கிலாந்து அணியில் உள்ள சுமார் 14 உறுப்பினர்கள் விடுதியில் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 5 வீரர்கள் மட்டுமே புதன்கிழமை பயிற்சிக்கு வெளியே வந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறிகள் கோவிட்-19 தொடர்புடையவை அல்ல என உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், 24 மணி நேரத்திற்குள் குணமடைந்துவிடுவார்கள் என அணியின் நிர்வாகம் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி தங்கள் சொந்த சமையல்காரரை அழைத்து வந்த போதிலும், வீரர்கள் வயிரூ கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதல் டெஸ்ட் போட்டிக்கான அணி:
இந்நிலையில், இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள பதினோரு வீரர்கலின் பட்டியலை அறிவித்தது. லியாம் லிவிங்ஸ்டோன் தனது முதல் ஆட்டத்தில் களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Getty Images
முதல் டெஸ்டுக்கான இங்கிலாந்து விளையாடும் லெவன்: சாக் க்ராலி , பென் டக்கெட் , ஒல்லி போப், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஹாரி புரூக் , பென் ஃபோக்ஸ் , லியாம் லிவிங்ஸ்டோன், ஜாக் லீச் , ஒல்லி ராபின்சன் , ஜிம்மி ஆண்டர்சன்.