தமிழக வீரரின் சுழலில் சுருண்டது இங்கிலாந்து! இந்திய அணிக்கு இமலாய இலக்கு
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 178 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பிப்ரவரி 5ம் திகதி தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 3வது நாள் வரை தொடர்ந்து விளையாடி முதல் இன்னிங்ஸில் 578 ஓட்டங்கள் குவித்தது.
முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நான்காவது நாளின் போது முதல் இன்னிங்ஸில் 337 ஓட்டங்களுக்கு சுருண்டது. மீதம் 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டமே உள்ள நிலையில் பாலோ ஆன் கொடுக்காமல் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது.
அஸ்வின் சுழலை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து 178 ஓட்டங்களுக்கு சுருண்டது.
A bowling spell to cherish for @ashwinravi99 at his home ground.#INDvENG pic.twitter.com/1j9tmXmPYw
— BCCI (@BCCI) February 8, 2021
ரோரி பர்ன்ஸ் (0), டொமினிக் சிப்லி (16), டேனியல் லாரன்ஸ் (18), ஜோ ரூட் (40), பென் ஸ்டோக்ஸ் (7), ஒல்லி போப் (28), ஜோஸ் பட்லர் (24), டொமினிக் பெஸ் (25), ஜோப்ரா ஆர்ச்சர் (5), ஜேம்ஸ் ஆண்டர்சன் (0).
ஜாக் லீச் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 8 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய 420 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து.
இந்திய தரப்பில் பந்துவீச்சில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
நதீம் 2 விக்கெட்டுகளையும், பும்ரா, இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
420 என்ற இமலாய இலக்கை நோக்கி துடுப்பாட்டத்தை தொடங்கிய இந்திய அணி 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 39 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
ரோகித் சர்மா 12 ஓட்டங்களில் அவுட்டானார். ஷுப்மன் கில் (15), புஜாரா (12) ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.
நாளை கடைசி மற்றும் 5வது நாள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி வெற்றிக்கு 381 ஓட்டங்கள் தேவை. சென்னை டெஸ்ட் நான்காவது ஆட்டத்தின் போது இந்திய நட்சத்திர பந்து வீச்சளார் இஷாந்த் சர்மா தனது 300வது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றினார்.
இந்திய அணியில் கபில் தேவ், ஜாகிர் கானுக்கு அடுத்தபடியாக 300 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றி ஒரே வீரர் இஷாந்த் சர்மா தான் என்பது குறிப்பிடத்தக்கது.