இந்திய கிரிக்கெட் ரசிகர்களை வம்பிழுக்கும் வகையில் வெளியான வீடியோ! வேறு வீடியோ மூலம் ரசிகர்கள் தந்த பதிலடி
இந்திய கிரிக்கெட் ரசிகர்களை வம்புக்கிழுக்கும் வகையில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும் பதிலடி கொடுத்துள்ளனர்.
இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் சமீபத்தில் இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில், 3 போட்டிகளில் ஆடி 8 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றியிருந்தார்.
இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆதரவாகவுள்ள அந்த நாட்டைச் சேர்ந்த ட்விட்டர் பக்கம் ஒன்று, ரஹானே மற்றும் சுப்மன் கில் ஆகியோரை சென்னை மைதானத்தில் வைத்து ஆண்டர்சன் விக்கெட் எடுக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளது.
மேலும், இந்த வீடியோவில், 'ஆண்டர்சனை 'Clouderson' எனக் கூறும் இந்திய ரசிகர்களுக்கு இந்த வீடியோ' என கிண்டலாக குறிப்பிட்டுள்ளது.
To all the India fans in our mentions saying Jimmy 'Clouderson' ?? pic.twitter.com/PPt5PkLSSr
— England's Barmy Army (@TheBarmyArmy) May 10, 2021
ஆண்டர்சன் என்ன தான் அதிக விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும், அவர் நன்கு தெரிந்த பிட்ச்கள் மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலைகளில் தான் சிறப்பாக செயல்படுவார் என 'Clouderson' என சிலர் குறிப்பிடுவர்.
இதனைக் குறிப்பிட்டு, இந்திய மைதானங்களிலும் ஆண்டர்சன் பந்துகள் ஸ்விங் ஆகும் என்பதை, ரஹானே மற்றும் சுப்மன் கில் ஆகியோரை அவுட் எடுத்த வீடியோவை வைத்து, அந்த ட்விட்டர் பக்கம் குறிப்பிட்டிருந்தது.
இந்திய ரசிகர்களை வம்பிழுக்கும் வகையில், இந்த வீடியோவை அவர்கள் பதிவிட்ட நிலையில், இதனைக் கண்ட இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர்.
அதாவது ரஹானே மற்றும் சுப்மன் கில் ஆகியோரை அவுட் எடுத்த அதே தொடரில், இந்திய வீரர் ரிஷப் பண்ட் ஆண்டர்சனின் பந்தை, ரிவர்ஸ் ஸ்கூப் மூலம் பவுண்டரியாக மாற்றினார். இந்த வீடியோவை வெளியிட்டு இங்கிலாந்து ட்விட்டர் பக்கத்தில் இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர். குறித்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
— ????? ?????? (@Manav_Chawla_) May 10, 2021