3வது ஆஷஸ் டெஸ்டில் இக்கட்டான நிலையில் இங்கிலாந்து... தொடர் வெற்றியை நோக்கி அவுஸ்திரேலியா
மெல்போர்னில் நடைபெற்று வரும் 3வது ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து போட்டியை டிரா செய்வதற்கான வாய்ப்பே மிக குறைவாக உள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
2 போட்டிகள் முடிந்த நிலையில் இரண்டிலும் அவுஸ்திரேலிய வெற்றிப்பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், டிசம்பர் 26 மெல்போர்னில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் தொடங்கியது.
டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து 185 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக ஜோ ரூட் 50 ரன்கள் அடித்தார். அவுஸ்திரேலியா தரப்பில் பந்து வீச்சில் பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லியோன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதைதொடர்ந்து முதலில் இன்னிங்ஸில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்திருந்து.
2வது நாள் தொடர்ந்து பேட்டிங் செய்த அவுஸ்திரேலிய அணி 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஹாரிஸ் 76 ரன்கள் அடித்தார்.
இங்கிலாந்து தரப்பில் பந்து வீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
2வது இன்னிங்ஸை் தொடங்கிய இங்கிலாந்து அணி, 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்துள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில், ஹசீப் ஹமீத் (7), கிரேலி (5), டேவிட் மலான் (0), ஜாக் லீச் (0) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ரூட் (12), ஸ்டோக்ஸ் (2) களத்தில் உள்ளனர்.
An incredible finish to day two!
— Cricket Australia (@CricketAus) December 27, 2021
Brilliant bowling from Mitch Starc and Scott Boland has our boys in a very strong position - England trail by 51 with six wickets in hand #Ashes pic.twitter.com/CGtqtjPQYj
அவுஸ்திரேலியாவை விட 51 ரன்கள் பின்தாங்கியுள்ள நாளை 3வது நாள் ரூட்-ஸ்டோக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி இங்கிலாந்து அணியை மீட்பார்கள் என ரசிர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
அதேசமயம், 6 விக்கெட்களை கைப்பற்றி இங்கிலாந்தை வீழ்த்தி, 3-0 என ஆஷஸ் தொடரை கைப்பற்றும் முனைப்போடு நாளை அவுஸ்திரேலிய அணி களமிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.