யூரோ கிண்ணம் இறுதிப் போட்டிக்குள் முதன்முறையாக நுழைந்த இங்கிலாந்து
அதிரடிக்கு பெயர்போன அணியான டென்மார்க்கை சிதைத்து, பலம் பொருந்திய இங்கிலாந்து அணி யூரோ கிண்ணம் 2020 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
கூடுதல் நேரம் வரை நீண்ட ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து டென்மார்க் அணியை வெற்றி கொண்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்காக Harry Kane கோல் ஒன்றை பதிவு செய்ததும், டென்மார்க்கின் Simon Kjær பதிவு செய்த செல்ஃப் கோலும் இங்கிலாந்து அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி இத்தாலியை எதிர்கொள்கிறது.
டென்மார்க்குக்காக Mikkel Damsgaard கோல் அடித்தார், ஆனால் Simon Kjaer-ன் சொந்த கோல் இங்கிலாந்துக்கு உதவியது.
டென்மார்க் காலிறுதியில் களமிறக்கிய அதே அணியை அதிமுக்கியமான இந்த ஆட்டத்திலும் களமிறக்கியுள்ளது.
இங்கிலாந்து அணி Jadon Sancho-கு பதிலாக Saka-வை களமிறக்கியுள்ளது. முதல் பாதியில் இங்கிலாந்து அணி 4-2-3-1 என்ற வடிவத்திலும் டென்மார்க் அணி 3-4-3 என்ற வடிவத்திலும் விளையாடியுள்ளனர்.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே இங்கிலாந்து சிறப்பான விளையாட்டை முன்னெடுத்தனர். டென்மார்க் வீரர்களுக்கு தண்ணி காட்டும் வகையில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடினர்.
ஆட்டத்தின் 5ம் நிமிடத்தில் இங்கிலாந்து அணித்தலைவர் அதிரடியாக உருவாக்கிய கோல் வாய்ப்பை Raheem Sterling தவற விட்டார். ஆனால் 12ம் நிமிடத்தில் Raheem Sterling முன்னெடுத்த கோல் வாய்ப்பு டென்மார்க் வீரர்களால் முறியடிக்கப்பட்டது.
15ம் நிமிடத்தில் டென்மார்க் அணி முன்னெடுத்த கோல் வாய்ப்பும் தவறியது. தொடக்க சில நிமிடங்களில் டென்மார்க் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், பின்னர் இங்கிலாந்துடன் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
ஆட்டத்தின் 30ம் நிமிடத்தில் டென்மார் அணி இங்கிலாந்தின் ரதகஜ படையை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டு, முதல் கோல் பதிவு செய்தது.
இதனால் கடும் நெருக்கடியை சந்தித்த இங்கிலாந்து அணி, அடுத்து அதிரடி காட்டியது. 37ம் நிமிடத்தில் Raheem Sterling இன்னொரு கோல் வாய்ப்பை உருவாக்க, அதை டென்மார்க் வீரர்கள் முறியடித்தனர்.
ஆனால் 39ம் நிமிடத்தில் டென்மார்க் அணித்தலைவரின் செல்ஃப் கோல் இங்கிலாந்துக்கு வரமாக அமைந்தது.