இங்கிலாந்துடனான 3வது டெஸ்டில் இந்திய அணி திணறல்! விக்கெட்களை அள்ளும் ஆண்டர்சன்.. மீண்டும் மோசமாக அவுட்டான கோலி வீடியோ
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் ஆடி வருகிறது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி டிராவிலும், இரண்டாவது போட்டியில் வரலாற்று வெற்றியும் பெற்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற கடுமையான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அணியில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை.
All in readiness! ?
— BCCI (@BCCI) August 25, 2021
3⃣, 2⃣, 1⃣ & here we go! ? ? #TeamIndia #ENGvIND
Follow the match ? https://t.co/FChN8SDsxh pic.twitter.com/V2q8i0zvgM
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் களமிறங்கினர். இதில் கே.எல் ராகுல் 4 பந்துகளில் டக் அவுட் ஆகி ஆண்டர்சன் பந்துவீச்சில் வெளியேறினார்.
அடுத்து வந்த புஜாராவும் 1 ரன்னில் ஆண்டர்சனிடம் வீழ்ந்தார். அடுத்ததாக கேப்டன் விராட் கோலி களம் கண்டார். தொடர்ந்து தொதப்பி வரும் கோலி இந்த ஆட்டத்திலாவது ஜொலிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் ஒரு பவுண்டரி உட்பட வெறும் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
தற்போதைய நிலவரப்படி ரோகித் சர்மாவும், ரஹானேவும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்துள்ளது.
We think @jimmy9 enjoyed this one! ?
— England Cricket (@englandcricket) August 25, 2021
Scorecard/Videos: https://t.co/UakxjzUrcE
??????? #ENGvIND ?? pic.twitter.com/3zGBCmJlhQ