அடிலெய்டு மைதானம்! டாஸில் தோற்றால் வெற்றி உறுதி
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இன்று அடிலெய்டு மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து
டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது, இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக இந்தியாவின் கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா களமிறங்கினர்.
5 ரன்கள் எடுத்த நிலையில் கே.எல்.ராகுல் ஆட்டமிழக்க, விராட் கோலி களமிறங்கினார், 6 ஓவர்கள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்திருந்தது.
ரோஹித் சர்மா, 27 ரன்கள் எடுத்த நிலையில் சாம் கரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார், அடுத்ததாக சூர்யகுமார் களமிறங்கியும், 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
தற்போது வரை 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி.
இந்தியா வெற்றி பெறுமா?
அடிலெய்டு மைதானத்தில் இதுவரை நடந்த 11 சர்வதேச டி20 போட்டிகளில் டாஸ் ஜெயித்த அணிகள் போட்டியை வென்றதே இல்லை, எனவே இங்கிலாந்து தோல்வியடையலாம் என கூறப்படுகிறது.
2016ல் ஆஸ்திரேலியா, 2022ல் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடிய இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.