உலக கோப்பையில் மேஜிக் செய்யுமா பாகிஸ்தான்? நாணய சுழற்சியில் வென்றது இங்கிலாந்து அணி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துடன் மோதும் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழையுமான என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேஜிக் செய்யுமா பாகிஸ்தான்?
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டிவிட்ட நிலையில், இன்று இங்கிலாந்து அணியுடன் பாகிஸ்தான் மோதுகிறது.
நியூசிலாந்து அணி 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை பெற்று இருப்பதுடன் +0.743 ரன் ரேட் உடன் 4 புள்ளி பட்டியலில் இடத்தில்உள்ளது.
பாகிஸ்தான் அணி 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்று +0.036 ரன் ரேட் உடன் உள்ளது, பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இங்கிலாந்து அணியுடன் நடைபெறும் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றியை பதிவு செய்ய வேண்டும்.
அதாவது, பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடினால் இங்கிலாந்தை 287 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அல்லது இரண்டாவதாக துடுப்பாடும் பட்சத்தில் இங்கிலாந்து நிர்ணயிக்கும் இலக்கை 2.3 ஓவர்களில் அடித்துவிட வேண்டும்.
எனவே இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளப்பியுள்ளது.
இதற்கிடையில் எங்கள் அணியின் ஃபகர் ஜமான் 30 ஓவர்கள் நிலைத்து நின்று ஆடினால் நாங்கள் மிகப்பெரிய இலக்கை எட்டுவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளது.
டாஸ் வென்ற இங்கிலாந்து
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியுள்ளது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
??
— England Cricket (@englandcricket) November 11, 2023
Quick fist bump and we're ready to go!#EnglandCricket | #CWC23 pic.twitter.com/K0e6cLujat
இந்தியர்களுக்கு சிறப்பு நன்றி, ஆப்கான் வாழ்க! உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய பின் நெகிழ்ச்சி பதிவுகள்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |