கடைசி கட்டத்தில் ட்விஸ்ட்! வெற்றியை விளிம்பில் பறிகொடுத்த இந்தியா..வீணான ஜடேஜா போராட்டம்
லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
193 ஓட்டங்கள் இலக்கு
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் லார்ட்ஸில் நடந்தது.
Do you know why Siraj is so sad ?
— Mr. Democratic (@MrDemocratic_) July 14, 2025
Because he knows that some people on Twitter will troll him saying that he deliberately lost his wicket.
Stay strong Siraj ✊#INDvsENG
pic.twitter.com/DRXUroBu2o
இங்கிலாந்து, இந்தியா அணிகள் முதல் இன்னிங்ஸில் முறையே 387 ஓட்டங்கள் குவித்தன. இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 192 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
பின்னர் களமிறங்கிய இந்தியா நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 54 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் கடைசி நாள் ஆட்டத்தை ஆடிய இந்திய தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கே.எல்.ராகுல் 39 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ரிஷாப் பண்ட் 9 ஓட்டங்களில் ஆர்ச்சர் ஓவரில் போல்டு ஆனார்.
நங்கூரமாக நின்ற ரவீந்திர ஜடேஜா
அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் ஓட்டங்கள் எடுக்காமல் ஆர்ச்சர் ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
பின்னர் நிதிஷ் குமாரை (13) வோக்ஸ் வெளியேற்ற, ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் பும்ரா 5 (54) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் நங்கூரமாக நின்று ஆடிய ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். அவருக்கு உறுதுணையாக சிராஜ் நின்று ஆடினார்.
ஆனால், அணியின் ஸ்கோர் 170 ஆக இருந்தபோது, பஷீர் பந்துவீச்சில் சிராஜ் எதிர்பாராத விதமாக போல்டு ஆனார். இதனால் இங்கிலாந்து அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி வரை களத்தில் நின்ற ஜடேஜா 61 (181) ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes), ஜோப்ரா ஆர்ச்சர் (Jofra Archer) தலா 3 விக்கெட்டுகளும், பிரிடோன் கார்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்த டெஸ்டில் மொத்தம் 77 ஓட்டங்கள் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்த இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |