அவுஸ்திரேலியாவை நொறுக்கி..8 ஆண்டுகளுக்கு பின் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து
England beat australia by 97 runs: அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஹோபார்ட்டில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.
கடைசி ஒருநாள் போட்டி
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹோபார்ட்டில் நடந்தது.
முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 328 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பென் டக்கெட் (Ben Duckett) 133 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 231 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
மேட் ரென்ஷா (Matt Renshaw) 55 (70) ஓட்டங்களும், அலெக்ஸ் கேரி 37 (53) ஓட்டங்களும், ஜேக் எட்வர்ட்ஸ் 31 (36) ஓட்டங்களும் எடுத்தனர்.

சோனி பேக்கர்
மிரட்டலாக பந்துவீசிய சோனி பேக்கர் (Sonny Baker) 4 விக்கெட்டுகளும், லியாம் டாவ்ஸன் 3 விக்கெட்டுகளும், அட்கின்ஸன் மற்றும் ப்ரூக் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
சதம் விளாசிய பென் டக்கெட் ஆட்டநாயகன் விருதும், 190 ஓட்டங்கள் குவித்த டாம் பான்டன் தொடர் நாயகன் விருதும் வென்றனர்.
