இறுதிப்போட்டியில் டக்அவுட் ஆன சோஃபி: 80 ரன்னில் சுருண்ட நியூஸிலாந்து..தொடரை வென்ற இங்கிலாந்து
நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.
சுருண்ட நியூஸிலாந்து
இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி கவுண்டி மைதானத்தில் நடந்தது.

முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 19.1 ஓவர்களில் 80 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஜெஸ் கெர் 20 ஓட்டங்கள் எடுத்தார்.
கடந்த போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய சோஃபி டிவைன் டக்அவுட் ஆனார்.
இங்கிலாந்து வெற்றி
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து 13.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 81 ஓட்டங்கள் எடுத்து, அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

சோஃபியா டங்லே 22 ஓட்டங்களும், மையா 19 ஓட்டங்களும், ஹீதர் நைட் 18 ஓட்டங்களும் எடுத்தனர்.
டேனியில்லே கிப்ஸன் ஆட்டநாயகி விருதும், லின்சே ஸ்மித் தொடர் நாயகி விருதும் பெற்றனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |