சொந்த மண்ணில் டி20 தொடரை கோட்டை விட்ட இலங்கை: 2வது போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி
இலங்கைக்கு எதிரான 2வது போட்டியில் வெற்றி பெற்று டி20 தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதல்
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
Toss Update 🪙
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) February 1, 2026
England won the toss and elect to field first.
Game on! 🏏🔥#SLvENG #SriLankaCricket pic.twitter.com/o4yJaMY4ba
இதனை தொடர்ந்து நடைபெற்று வரும் டி20 போட்டிகளில், முதல் போட்டியில் இலங்கை வீழ்த்தி இங்கிலாந்து கிரிக்கெட் வெற்றி பெற்றது.
இந்நிலையில் பல்லேகலேவில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
டி20 தொடரையும் இழந்தது இலங்கை
அதன்படி முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக பவன் ரத்தினநாயகெ 40 ஓட்டங்களும், கமில் மிஸ்ரா 36 ஓட்டங்களும், பதும் நிசங்கா 34 ஓட்டங்களும் குவித்தனர்.
Another series win 🔒 pic.twitter.com/MfzjdHHlfz
— England Cricket (@englandcricket) February 1, 2026
190 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கிய நிலையில் மழை குறுக்கீடு காரணமாக போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு இலக்கு 168 ஓட்டங்களாக மாற்றப்பட்டது.
இறுதியில் இங்கிலாந்து அணி 16.4 ஓவர்கள் முடிவிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்கள் குவித்து டி20 தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டாம் பெண்டன் 54 ஓட்டங்கள் குவித்தார், மேலும் ஜோஸ் பட்லர் 39 ஓட்டங்களும், ஹாரி புரூக் 34 ஓட்டங்களும் குவித்து அசத்தினர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |