சென்னை டெஸ்ட்: சுருண்டது இந்தியா! பாலோ ஆன் கொடுக்காமல் வெற்றிப்பெற இங்கிலாந்து அதிரடி திட்டம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 337 ஓட்டங்களுக்கு சுருண்டது இந்தியா.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 5 டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பிப்ரவரி 5ம் திகதி தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் அதிரடி இரட்டை சதத்தால் 3வது நாள் வரை தொடர்ந்து விளையாடி முதல் இன்னிங்ஸில் 578 ஓட்டங்கள் குவித்தது.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸை விளையாட தொங்கிய இந்திய அணி, 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 257 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இன்று நான்காம் நாள் துடுப்பாட்டதை தொடர்ந்த இந்தியா 337 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.
ரோகித் சர்மா (6), ஷுப்மன் கில் (29), புஜாரா (73), கோஹ்லி (11), ரஹானே (1), ரிஷப் பண்ட் (91), ரவிச்சந்திரன் அஸ்வின் (31), இஷாந்த சர்மா (4), பும்ரா (0), சபாஷ நதீம் (0).
வாஷிங்க்டன் சுந்தர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்கள் எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் பந்து வீச்சில் டொமினிக் பெஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஆண்டர்சன், ஆர்ச்சர் மற்றும் ஜாக் லீச் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். பாலோ ஆன் கொடுக்காமல் 241 ஓட்டங்ள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது இங்கிலாந்து அணி.
Innings Break!
— BCCI (@BCCI) February 8, 2021
India all out for 337 in the first innings. England second innings to get underway shortly.
Scorecard - https://t.co/VJF6Q62aTS #INDvENG @Paytm pic.twitter.com/xOEIFFBGP6
இன்னும் கடைசி மற்றும் 5வது நாள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து 4வது நாள் இறுதிவரை அதிரடியாக விளைாயடி இந்திய அணிக்கு 400-க்கும் கூடுதலான ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.