ஆங்கிலேய கால்வாயில் பரிதாபம்! 5 பேர் பலியான சம்பவத்தில் 3 பேர் கைது
ஆங்கில கால்வாயில் குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆங்கில கால்வாயில் ஏற்பட்ட துயரம்
ஆங்கிலேய கால்வாயைக் கடக்க முயன்ற போது சிறுமி ஒருவர் உள்பட ஐந்து குடியேற்றத் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை பிரித்தானிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அதிகப்படியான மக்களை ஏற்றிச் சென்ற படகு, செவ்வாய்க்கிழமை அன்று பிரித்தானிய கடற்கரை அருகே கவிழ்ந்தது.
பயணிகள் இடையே பீதி பரவியதையடுத்து இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
BREAKING: The National Crime Agency makes a statement on the five migrant deaths, after an overcrowded small boat got into difficulty in English Channel yesterday.https://t.co/PAiZ4D1jU3
— Sky News (@SkyNews) April 24, 2024
? Sky 501, Virgin 602, Freeview 233 and YouTube pic.twitter.com/4ZyXr5Upk7
மீட்புக் குழுவினர் சுமார் 50 பேரை மீட்டுள்ளனர், அதில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துயர சம்பவத்தில் ஏழு வயது சிறுமி, பெண் ஒருவர் மற்றும் 3 ஆண்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
3 பேர் கைது
இதில் இரண்டு சூடானிய நபர்கள் (வயது 19 மற்றும் 22) மற்றும் ஒரு 22 வயது தென் சூடான் குடிமகன் ஆகிய மூன்று பேர், சட்டவிரோத குடியேற்றத்தை ஊக்குவித்தல் மற்றும் சட்டவிரோதமாக UK க்குள் நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்தின் விசாரணையில் தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) பிரெஞ்சு அதிகாரிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
இங்கிலாந்தில் குடியேற்றக் கொள்கைகள் குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
BREAKING: The National Crime Agency makes a statement on the five migrant deaths, after an overcrowded small boat got into difficulty in English Channel yesterday.https://t.co/PAiZ4D1jU3
— Sky News (@SkyNews) April 24, 2024
? Sky 501, Virgin 602, Freeview 233 and YouTube pic.twitter.com/4ZyXr5Upk7
ஆபத்தான கால்வாய் கடப்புகளை தடுக்கும் நோக்கில், தஞ்சம் கோருபவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்த அனுமதிக்கும் மசோதாவை பிரித்தானிய அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |