ஆங்கில மொழி தொடர்பில் சுவிஸ் அமைப்பொன்று எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் ஆங்கில மொழிப் பயன்பாடு அதிகரித்துவருவது தொடர்பில், மொழிசார் அமைப்பொன்று எச்சரிக்கை செய்தி ஒன்றைத் தெரிவித்துள்ளது.
அதிகரித்துவரும் ஆங்கில மொழிப் பயன்பாடு
சுவிட்சர்லாந்தில், ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலிய மொழி மற்றும் ரோமான்ஷ் என்னும் மொழி என, மொத்தம் நான்கு மொழிகள் தேசிய மொழிகளாக பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
பன்மொழித்தன்மை என்பது சுவிஸ் தேசிய அடையாளத்தின் ஓர் முக்கியத் தூணாகும்.

ஆனால், சமீப காலமாக, சில மாகாணங்களில், ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக கற்பித்தல் அதிகரித்துவருகிறது.
அதாவது, ஜேர்மன் மொழி பேசும் மாகாணங்களில் இரண்டாவது மொழியாக பிரெஞ்சு மொழியும், பிரெஞ்சு மொழி பேசும் மாகாணங்களில் இரண்டாவது மொழியாக ஜேர்மன் மொழியும் கற்பிக்கப்படவேண்டும்.
ஆனால், அதற்கு பதிலாக, ஆங்கிலத்துக்கு சில மாகாணங்கள் முக்கியத்துவம் கொடுத்துவருகின்றன.
இந்நிலையில், Switzerland's Bilingualism Forum என்னும் மொழிசார் அமைப்பு, இரண்டாவது மொழியாக தேசிய மொழி ஒன்றிற்கு பதில் ஆங்கிலத்தைக் கற்பித்தல், தேசிய ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளது.
விடயம் என்னவென்றால், உலகளாவிய தொழில் மற்றும் உயர் கல்வி என்னும் விடயங்களைக் கருத்தில் கொள்ளும்போது, ஆங்கிலம் கற்றல் அதற்கு உதவியாக இருக்கும் என மாணவர்களும் பெற்றோர்களும் கருதுகிறார்கள்.
ஆகவே, இரண்டாவது மொழியாக தேசிய மொழி ஒன்றைக் கற்பதற்கு பதிலாக ஆங்கிலத்தைக் கற்கும் விடயம், தேசிய அளவில் விவாதப்பொருளாக மாறிவருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |