இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்தாட்ட தொடர் : லிவர்பூல் கழகம் வெற்றி
இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்தாட்ட தொடரில் மென்செஸ்டர் யுனைட்ரட் கழகத்தை 7 க்கு 0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் கழகம் வெற்றிகொண்டுள்ளது.
இந்தப் போட்டியில் இரண்டு கோல்களைப் போட்ட மொஹமட் சலா, லிவர்பூல் கழகத்திற்காக அதிக கோல்களைப் போட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்தாட்ட தொடரில் மென்செஸ்ரர் யுனைட்ரட் கழகத்தை தனது சொந்த மைதானத்தில் லிவர்பூல் கழகம் எதிர்கொண்டது.
ஏற்கனவே கரபா கிண்ணத்தை வெற்றிகொண்ட உற்சாகத்தில் மென்செஸ்ரர் யுனைட்டட் கழகம் களமிறங்கியதுடன், பிறிமியர் லீக் போட்டிகளில் கடுமையான பின்னடைவை சந்தித்திருந்த லிவர்பூல் கழகம் தம்மை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தப் போட்டியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் சளைக்காமல் விளையாடிய போதிலும் போட்டியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த லிவர்பூல் கழகம் 43 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றைப் போட்டது.
இரண்டாவது பாதியில் மென்செஸ்ரர் யுனைட்ரட் கழகத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தனது ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் கழகம் அடுத்தடுத்து ஆறு கோல்களைப் போட்டது.
இறுதி வரை எந்தவொரு கோல்களையும் மென்செஸ்ரர் யுனைட்ரட் கழகம் போட்டாத நிலையில், இறுதியில் 7 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் லிவர்பூல் கழகம் வெற்றியை தனதாக்கியது.
இந்தப் போட்டியில் இரண்டு கோல்களைப் போட்டதன் மூலம் லிவர்பூல் கழகத்திற்காக மொத்தமாக 129 கோல்களைப் பெற்ற மொஹமட் சலா, கழகத்திற்காக அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்த வெற்றியுடன் 42 புள்ளிகளைப் பெற்றுள்ள லிவர்பூல் கழகம் புள்ளிகள் பட்டியலில் 5 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பையும் அதிகரித்துக்கொண்டுள்ளது.