136 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து! 478 ரன்கள் முன்னிலை..சம்பவம் செய்த இந்திய அணி
மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சில் இங்கிலாந்து 136 ஓட்டங்களுக்கு சுருண்டது.
முதல் இன்னிங்சில் 428
மும்பையில் நடந்து வரும் இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் இந்தியா 478 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 428 ஓட்டங்கள் குவித்ததைத் தொடர்ந்து, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்க்சை தொடங்கியது.
Twitter (BCCIwomen)
தொடக்க வீராங்கனைகளான பியூமான்ட் (Beaumont) 10 ஓட்டங்களிலும், டன்க்ளே (Dunkley) 11 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
தீப்தி சர்மா மிரட்டல் பந்துவீச்சு
கேப்டன் ஹெதர் நைட் (Heather Knight) 11 ஓட்டங்களில் பூஜா ஓவரில் அவுட் ஆனார். அடுத்து வந்த நட் சிவர் (Nat Sciver) அதிரடியில் மிரட்டினார்.
Twitter (Englandcricket)
ஆனால் தீப்தி சர்மாவின் மாயாஜால சுழலில் இங்கிலாந்து சரசரவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இறுதியில் அந்த அணி 136 ஓட்டங்களுக்கு சுருண்டது. நட் சிவர் 70 பந்துகளில் 59 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகள் அடங்கும். தீப்தி சர்மா (Deepti Sharma) 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
Twitter (Englandcricket)
அதனைத் தொடர்ந்து இந்திய அணி களமிறங்கியது. இரண்டாம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 186 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
Twitter (BCCIwomen)
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 44 ஓட்டங்களுடனும், பூஜா 17 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இதுவரை இந்திய அணி 478 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |