37 வயதில் மிரட்டல் ஆட்டம்! ஸ்டம்புகளை தாக்கிய வீடியோ
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தியது.
இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, கேத்தரின் பிரண்ட் வேகத்தில் நிலைகுலைந்தது. வால்வார்ட் மட்டும் 55 ஓட்டங்கள் விளாச, ஏனைய வீராங்கனைகள் சொதப்பியதால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
மிரட்டலாக பந்து வீசிய 37 வயது வீராங்கனை கேத்தரின் பிரண்ட், 4 ஓவர்கள் வீசி 15 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Brunty strikes straight away! ?
— England Cricket (@englandcricket) July 21, 2022
Scorecard & Videos: https://t.co/GFEAeJFv5l
??????? #ENGvSA ?? | @KBrunt26 pic.twitter.com/4DK5rOGNlL
அத்துடன் 97வது போட்டியில் விளையாடிய அவர் 100 விக்கெட்டுகள் மைல்கல்லையும் எட்டினார். பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 114 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டன்க்லே 39 பந்துகளில் 59 ஓட்டங்கள் எடுத்தார்.
? IT20 wickets for our best ever! ?
— England Cricket (@englandcricket) July 21, 2022
Scorecard & Videos: https://t.co/GFEAeJX5WT
??????? #ENGvSA ?? | @KBrunt26 pic.twitter.com/7a2vTcemYU
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நியூ ரோடு மைதானத்தில் 23ஆம் திகதி நடைபெற உள்ளது.
PC: Twitter (@englandcricket)