தென் ஆப்பிரிக்காவை புரட்டியெடுத்த இங்கிலாந்து அணி! தொடரை கைப்பற்றி அசத்தல்
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணி 114 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பிரிஸ்டோலில் நேற்று நடந்தது.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. தொடக்க வீராங்கனைகள் பியூமான்ட் 58 ஓட்டங்களும், எம்மா லாம்ப் 67 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய டன்க்லே 93 பந்துகளில் 107 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார். நடாலி சிவெர் அதிரடியாக 47 பந்துகளில் 63 ஓட்டங்கள் எடுக்க, இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 337 ஓட்டங்கள் குவித்தது.
அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும், அடுத்து வந்த வீராங்கனைகள் சொதப்பியதால் 41 ஓவர்களில் 223 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
PC: Twitter (@englandcricket)
அதிகபட்சமாக மரிசன்னே கப் 59 பந்துகளில் 73 ஓட்டங்களும், லாரா வால்வார்ட் 48 பந்துகளும் 55 ஓட்டங்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சார்லோட்டே டீன் 4 விக்கெட்டுகளையும், இசி வோங் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
114 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 2-0 என தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி 18ஆம் திகதி நடக்க உள்ளது.
PC: Twitter (@englandcricket)