178 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற இங்கிலாந்து! வாஷ்அவுட் ஆன பாகிஸ்தான் அணி
மகளிர் இங்கிலாந்து அணி கடைசி ஒருநாள் போட்டியில், பாகிஸ்தானை 178 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது.
நட் சிவெர் சதம்
Chelmsfordயில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் மகளிர் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய பியூமண்ட் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து மையா பௌசியர் 33 பந்துகளில் 6 பவுண்டரிகள் விளாசி 34 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
பின்னர் வந்த ஹீத் நைட் 12 ஓட்டங்களில் அவுட் ஆனார். எனினும் நட் சிவெர் பிரண்ட் அதிரடியில் மிரட்டினார். பவுண்டரிகளை விரட்டிய அவர் 9வது ஒருநாள் சதத்தினை பதிவு செய்தார்.
In case you missed it, this is how good Nat Sciver-Brunt was yesterday 👇#EnglandCricket pic.twitter.com/OJkd4amdor
— England Cricket (@englandcricket) May 30, 2024
மறுமுனையில் டேனியில்லே வையட் 44 ஓட்டங்களும், எமி ஜோன்ஸ் 27 ஓட்டங்களும் எடுத்து அவுட் ஆகினர். நட் சிவெர் பிரண்ட் ஆட்டமிழக்காமல் 117 பந்துகளில் 2 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 124 ஓட்டங்கள் குவித்தார்.
அவருடன் 6வது விக்கெட் பார்ட்னர்ஷிப் அமைத்த அலிஸ் கேப்சியும் ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 302 ஓட்டங்கள் குவித்தது. உம்-இ-ஹனி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பாகிஸ்தான் ஆல் அவுட்
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். முனீபா அலி பொறுப்புடன் விளையாட ஆயிஷா ஸபார் 13 ஓட்டங்களிலும், நஜிஹா அல்வி 6 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து முனீபா அலி 47 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார். அதன் பின்னர் வந்த வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் அடுத்தடுத்து வெளியேறினர்.
Sophie Ecclestone's 100th ODI wicket! 🔥
— England Cricket (@englandcricket) May 29, 2024
She never stops amazing us 👏#EnglandCricket pic.twitter.com/GcX8VjyoTn
அலியா ரியாஸ் 36 ஓட்டங்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 29.1 ஓவரில் 124 ஓட்டங்களுக்கு சுருண்டது. எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் 178 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற இங்கிலாந்து, 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. முன்னதாக டி20 தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியதன் மூலம் பாகிஸ்தான் அணி வாஷ் அவுட் ஆனது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |