சரிந்த இந்திய அணி..தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து
அலிஸ் கேப்சே அதிரடியாக 24 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்
இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் பிளேயர் ஆப் தி மேட்ச் விருதையும், சோஃபியா டன்க்லே பிளேயர் ஆப் தி சீரிஸ் விருதையும் வென்றனர்
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை மகளிர் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.
பிரிஸ்டோலில் இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்கள் எடுத்து.
அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 33 ஓட்டங்களும், தீப்தி சர்மா 24 ஓட்டங்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளும், கிளென் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
The winning moment in Bristol. pic.twitter.com/oi7DXBc32b
— England Cricket (@englandcricket) September 15, 2022
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டன்க்லே 49 ஓட்டங்களும், கேப்சே 38 ஓட்டங்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ராதா யாதவ், ஸ்னேஹ் ராணா, பூஜா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
Twitter (@englandcricket)