கிறிஸ்மஸ் கொண்டாடலாமா? பிரித்தானியர்களுக்கு WHO முக்கிய அறிவுரை
பிரித்தானியாவில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுவது தொடர்பில் WHO முக்கிய அறிவுரை வழங்கியுள்ளது.
பிரித்தானியர்கள் கிறிஸ்மஸை கொண்டாடலாம், ஆனால், கொண்டாட்டம் சிறயளவில் திட்டமிடப்பட வேண்டும் என WHO-வைச் சேர்ந்த டாக்டர் Margaret Harris அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் Margaret Harris கூறியதாவது, நிச்சயமாக கிறிஸ்துமஸைக் கொண்டாடுங்கள், அந்த மகிச்சியான நேரத்தை நிச்சயமாக அனுபவிக்க வேண்டும்.
ஆனால் அதை சிறிய வட்டாரத்தில் கொண்டாடுங்கள், வெவ்வேறு இடங்களிலிருந்து ஏராளமான மக்கள் வரும் பெரிய, பெரிய கூட்டங்களுக்குச் செல்ல வேண்டாம், அங்குதான் பெரும்பாலும் தொற்று பரவுதல் நிகழ்கிறது.
சிறியளவில் கூடி கொண்டாடுங்கள், அங்கு யார் யார் வருகிறார்கள், குறிப்பாக தடுப்பூசி போட்டுள்ளார்களா என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள் மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள்.
பெரும்பாலும் நல்ல காற்றோட்டம் உள்ள பகுதிகளில் கொண்டாடுங்கள், ஜன்னல்களை திறந்து வையுங்கள்.
கொண்டாட்டங்களை சிறயதாக, கவனமாக, மகிழ்ச்சியாக இருக்கும் வண்ணம் திட்டமிடுங்கள் என்று டாக்டர் Margaret Harris அறிவுறுத்தியுள்ளார்.