புத்தாண்டை கொண்டாட ஒரே வழி இது தான்! பிரத்தானியர்களுக்கு போரிஸ் முக்கிய வலியுறுத்தல்
பிரித்தானியாவில் புத்தாண்டை கவனமாக மற்றும் எச்சரிக்கையாக கொண்டாட ஒரே வழி பூஸ்டர் டோஸ் போடுவது தான் என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக போரிஸ் ஜான்சன் கூறியதாவது, நாட்டில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட சுமார் 2.4 மில்லியன் பேர் இன்னும் பூஸ்டர் டோஸ் போடாமல் இருக்கிறார்கள்.
தற்போது மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் பெரும்பாலானோர் பூஸ்டர் டோஸ் போடாதவர்களாக இருக்கிறார்கள்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 90% பேர் பூஸ்டர் டோஸ் போடாதவர்கள் என மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால், நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட எட்டு மடங்கு வாய்ப்பு அதிகம்.
ஒமிக்ரான் மாறுபாடு தொடர்ந்து பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மருத்துவமனைகளில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆனால், ஒமிக்ரான் டெல்டாவை விட வீரியம் குறைந்தது, எனவே தற்போது நாம் செல்லும் பாதையிலே தொடர்ந்து பயணிக்கலாம் என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.